நொச்சி இலையின் அற்புத மருத்துவ பயன்கள்....! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, October 17, 2018

நொச்சி இலையின் அற்புத மருத்துவ பயன்கள்....!



நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இவை உடல் அசதியைத் தணிக்கும், சிறுநீரைப் பெருக்கும், காய்ச்சலைப் போக்கும், ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும். மாதவிலக்கை தூண்டும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்.
 
ஒரு தேக்கரண்டி நொச்சி இலை சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு, நெய் சேர்த்து, காலை மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும்.
 
நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க, காய்ச்சல், தலைவலி, பீனிசம் ஆகியவை குணமாகும்.

ஒரு பிடி நொச்சி இலைகளை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வேது பிடிக்க மண்டை நீரேற்றம் கட்டுப்படும்.
 
நொச்சி இலை தாவரத்தில் கருநொச்சி, நீலநொச்சி என இரண்டு வகை உண்டு. நொச்சித் தாவரத்தைப் போன்றே இருந்தாலும் இலைகள் மற்றும் தண்டுகள் நீல நிறமானவை. மேலும் நொச்சியின் மருத்துவப் பயன்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும்.

கீல் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்கள் மண்டைக் குடைச்சல் முதலியவற்றிற்குச் செய்யப்பபடும் மருந்துகளில் கருநொச்சி சிறப்பாகச் சேர்க்கப்படுகின்றது.

கால் வீக்கத்தை குறைக்க கரு நொச்சி இலைகளை அரைத்து பற்றுப் போடும் பழக்கம் கிராம மருத்துவத்தில் உள்ளது.

No comments: