12 நிமிடங்களில் போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம் ! சாம்சங்கின் புதிய கண்டுபிடிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, October 24, 2018

12 நிமிடங்களில் போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம் ! சாம்சங்கின் புதிய கண்டுபிடிப்பு



அடுத்த வருடத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வருகிறது இவ்வகை ஸ்மார்ட்போன்கள்...

Samsung Graphene Batteries : சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை க்ராபைன் பேட்டரிகளாக மாற்ற திட்டமிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். அடுத்த வருடத்தில் இருந்து சாம்சங் நிறுவனம் க்ராபைன் பேட்டரிகள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக சாம்மொபைல் இணையத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
 
Samsung Graphene Batteries காக காப்புரிமம் வாங்கிய சாம்சங்

கிராபைன் மூலக்கூறுகளைக் கொண்ட பேட்டரிகளை கடந்த வருடம் கண்டறிந்திருக்கிறது சாம்சங் நிறுவனம். அதற்காக கடந்த வருடம் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் காப்புரிமம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
எவ்வளவு விரைவாக சார்ஜ் செய்ய முடியும் ?

தற்போது நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரிகளை சார்ஜ் செய்ய குறைந்தது நாம் ஒரு மணி நேரம் செலவு செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அளவிற்கு ஒரு பேட்டரி சார்ஜ் ஆகிறதோ, அந்த இலக்கை வெறும் 12 நிமிடங்களில் கிராபைன் பேட்டரிகள் எட்டிவிடுமாம்.


சாம்சங் நிறுவனத்தின் அட்வான்ஸ்ட் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி இந்த கிராபைன் தொழில்நுட்பம் பற்றிய அறிவிப்பினை வெளியிடும் போதுலித்தியம் ஐயன் பேட்டரிகளைத் தவிர 45% வேகமாக கிராபைன் பேட்டரிகளை சார்ஜ் செய்திடலாம்என்று அறிவித்திருக்கிறது.

ஆரம்ப கட்டத்தில் கிராபைன் பேட்டரிகளின் விலை கூடுதலாக இருந்தாலும், கிராபைன் பேட்டரிகளின் தயாரிப்பு அதிகமாகும் போது இதன் விலை கணிசமாக குறையும் என்று சாம்சங் நிறுவனம் கூறியிருக்கிறது. ஆரம்ப காலங்களில் மிட்ரேஞ் ஸ்மார்ட் போன்களில் இதை பயன்படுத்தி பார்க்க இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

No comments: