ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் : வாடிக்கையாளர்களை கவரும் ஏர்டெல் புதிய திட்டம்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, September 28, 2018

ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் : வாடிக்கையாளர்களை கவரும் ஏர்டெல் புதிய திட்டம்!




Airtel Smart Recharge Prepaid Plans: தினமும் 100 எஸ்எம்எஸ்  உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. 

Airtel Smart Recharge Plans : ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ரீசார் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெலிகாம் சந்தையில்ஜியோவிற்கும்ஏர்டெல்லிற்கும் இடையேயுள்ள போட்டி நாடு அறிந்த ஒன்று. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள இந்த இரண்டு நிறுவனங்களும் மாறி மாறி அறிவிக்கும் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன.

குறிப்பாக சிறப்பு நாட்கள் மற்றும்  விசேஷ நாட்களில்  இவர்கள் வெளியிடும்  கேஷ்பேக் சலுகை,  ரீசார்ஜ் கூப்பன்கள் போன்றவை  மக்களை வெகுவாக கவர்கின்றன.

ஜியோவின் வருகைக்கு பின்னர் சொல்லவே வேண்டாம்  2ஜி யூசர்கள் எல்லாம் 4ஜிக்கு மாறினார்கள். அத்துடன் ரீசார்ஜ் திட்டங்களில் கேஷ்பேக் ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள், கூப்பன்கள் என ஜியோ அடுத்த பாய்ச்சலுக்கு பாய்ந்தது.
 இலவச இணைய மற்றும் அழைப்புகளுடன் ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டங்கள் : Airtel

அதனைத் தொடர்ந்து. ஏர்டெல் நிறுவனமும்  பல சலுகைகளை அறிவித்தது.  சந்தையில் இந்த நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க பிஎஸ்என்எல், வோடஃபோன் போன்ற நிறுவனங்களும் அவ்வப்போது குறைந்த செலவில் ரீசார்ஜ் திட்டங்கள், இலவச எஸ் எம் எஸ் வசதி போன்றவற்றை வழங்கி வருகிறது.
 Image result for airtel images
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.195 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 1.25 ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல், ரூ.168 விலையில் தினமும் 1 ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்  உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.195 ரீசார்ஜ் டேட்டா அதிகம் பயன்படுத்துவோருக்கென அதில் எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படவில்லை. மேலும், ரூ.168 ரீசார்ஜ் எம்எஸ்எஸ் அதிகம் பயன்படுத்துவோருக்கென வழங்கப்பட்டுள்ளதாம். இந்த இரு சலுகைகளும் குறிப்பிட்ட சில வட்டாரங்களில் மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: