விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான முறையை அறிமுகப்படுத்தியதற்கான தேசிய விருதினை பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, September 30, 2018

விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான முறையை அறிமுகப்படுத்தியதற்கான தேசிய விருதினை பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்!




பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.இராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி  நிறுவன  இயக்குனர் திரு.அறிவொளி, மெட்ரிக்லேஷன் பள்ளிகளின்  இயக்குநர் திரு.கன்னப்பன் மற்றும் முறைசாரா கல்வி இயக்குநர் திருமதி. லதா ஆகியோர்புதுமையான முறையில் கல்வி கற்பிப்பதற்கான தேசிய விருதைப் பெற்றமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 Image may contain: 2 people, including Dhilip Raju, people smiling, people standing
 புதுமையான முறையில் வகுப்பறையில் கற்பித்தலுக்கான தேசிய அளவு போட்டியில் ஆசிரியர் திலீப் அவர்களின் படைப்பான விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான முறையை அறிமுகப்படுத்தியதற்கான தேசிய விருதினை  NCERT ,NCTE   நிறுவனங்கள் வழங்கி கௌரவபடுத்தியுள்ளது.
 Image may contain: 2 people, including Dhilip Raju, people smiling, beard
     இப்போட்டியில் தேசிய அளவில் 240 மேற்பட்ட ஆசிரியர்களும் ,பேராசிரியர்களும் கலந்துகொண்டனர் இறுதி தேர்வில் 17 மாநிலங்களை சார்ந்த 28 ஆசிரியர்கள் தாள்களை சமர்பித்தனர் அதில் தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இருந்து இரண்டு ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது .
 Image may contain: 4 people, people smiling, indoor
  ஆங்கிலத்தில் திலீப் சமர்பித்த GAMIFIED GRAMMAR இதில் ஒவ்வொரு ஆங்கில இலக்கணத்திற்கும் ஒரு விளையாட்டை வகுப்பறையிலோ அல்லது விளையாட்டு மைதானத்திலோ விளையாட வைத்து தொடர்ந்து கணினி தொடுதிரையில் விளையாட அதன் பின் தேர்வு என்னும் முறையில் இதை வகுப்பறையில் கையாண்டு சமர்பித்தார்.  ஆசிரியர்களில் இவருடன் பெர்ஜினும் Science with ICT தலைப்பிற்கு விருது பெறுகிறார் .
 Image may contain: one or more people and people standing
 தமிழக பேராசிரியர்கள் இருவர் இவ்விருதை பெறுகின்றனர்.ஆசிரிய பயிற்சி முதல்வர் திரு .சின்னப்பன் Role of games மற்றும் பேராசிரியர் காசிராஜன் ‘Maths puzzles’ என்னும் தலைப்பிற்கும் ஆக மொத்தம் தமிழகத்திலிருந்து  நால்வர் இவ்விருதை பெற்றுள்ளது மகிழ்ச்சி.

 ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வகுப்பறையில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க புதுமையான விஷயங்களை ஒவ்வொரு நாளும் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கிறோம் . அவ்வாறு தாங்கள் செய்த புதுமையான  முயற்சிகளை பிற ஆசிரியர்களுக்கும் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல இப்போட்டி சிறந்த வாய்ப்பு
Image may contain: 12 people, people smiling, people standing

No comments: