முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்றுவீதம் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு புதிய திட்டம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, September 28, 2018

முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்றுவீதம் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு புதிய திட்டம்


வேலூர்: ஒரே காம்பவுண்டுக்குள் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் வகையில் முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்று வீதம் பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும்
அரசு, அரசு நிதியுதவி, சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் 25 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 3,000 உயர்நிலைப்பள்ளிகளும், 2,800 மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அரசு, அரசு நிதியுதவி மட்டுமின்றி சுயநிதி தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைகளும் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன், 6ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு மாற வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் 9ம் வகுப்புக்கு வேறு உயர்நிலைப்பள்ளிக்கோ, மேல்நிலைப்பள்ளிக்கோ மாற வேண்டிய கட்டாயம் உள்ளது.


No comments: