மகப்பேறு விடுப்பு நாட்களைப் பணிக்காலமாக கருதலாம்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, August 24, 2018

மகப்பேறு விடுப்பு நாட்களைப் பணிக்காலமாக கருதலாம்!


அரசு ஊழியர்களின் பயிற்சி கால நிறைவு மற்றும் பதவி
உயர்வுக்கு மகப்பேறு கால விடுப்பையும் பணிக் காலமாக கருத வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
திருச்சி மாவட்டத்தில் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருபவர் எஸ்.ரேணுகா. இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 2001ஆம் ஆண்டு வருவாய் உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன். எனது பெயர் 2007, 2008ஆம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து, உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு தகுதியான, உரிய நேரத்தில் 5 ஆண்டு பயிற்சி காலத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறினார்கள்.

மகப்பேறு விடுப்பில் சென்றதால் குறிப்பிட்ட நேரத்தில் 5 ஆண்டு பயிற்சி காலத்தை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மகப்பேறு விடுப்பு காலத்தையும் பணிக் காலமாக கருதி பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016இல் அரசு ஊழியர்கள் விடுமுறையில் செல்வது அவர்களின் பதவி உயர்வுக்கு ஒரு தடையல்ல எனக் கூறப்பட்டுள்ளது" என மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார்.


இதைகேட்ட நீதிபதி, "அரசு ஊழியர்கள் 5 ஆண்டு பயிற்சி காலத்தை நிறைவு செய்யவும், பதவி உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கும்போதும் அவர்களின் விடுமுறை காலத்தையும் பணிக் காலமாக கருத வேண்டும். ஆதலால், மனுதாரரின் பெயரை 2008ஆம் ஆண்டில் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்த்து 6 வாரத்தில், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்

No comments: