அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர் விவரம்: 31க்குள் பதிவேற்ற உத்தரவு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, August 26, 2018

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர் விவரம்: 31க்குள் பதிவேற்ற உத்தரவு


தமிழகம் முழுவதும் அரசு, அரசுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆக.31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களைப் பதிவு செய்ய தமிழக அரசின் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதள ("எமிஸ்') பதிவேற்றத்தை எந்த ஒரு மாணவரும் விடுதல் இன்றியும், இரட்டிப்பு பதிவு இன்றியும் முடிக்க வேண்டும். ஏதேனும் விடுதல் இருப்பில் அதை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து வட்டார வள மைய அலுவலர்கள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்கள் சரியாக உள்ளதாக என ஆசிரியர்களின் விவரங்களை நேரில் எடுத்து வரக்கூறி ஆசிரியர் பயிற்றுநர் உதவியுடன் சரிபார்க்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வரிசை எண் எமிஸ் மூலம் எடுக்க இருப்பதால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் விவரம் கணினி ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரைக் கொண்டு துல்லியமாக சரிபார்த்து மாற்றங்கள் இருப்பின் அதை சரி செய்ய வேண்டும்.

 


பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு குரூப் கோடு சரிபார்க்க வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் ஆக.31க்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும். ஆசிரியரின் முழு விவரம் புதிதாக பதிவேற்றம் செய்யவோ, ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆசிரியரை நீக்கவோ முடியாது. எனவே ஏற்கனவே உள்ள ஆசிரியர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

No comments: