பாரத ஸ்டேட் வங்கி : 1295 கிளைகளின் IFSC கோடு எண்கள் மாற்றம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, August 28, 2018

பாரத ஸ்டேட் வங்கி : 1295 கிளைகளின் IFSC கோடு எண்கள் மாற்றம்



நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது 1295 கிளைகளின் IFSC கோடு எண்களை மாற்றி உள்ளது.
 

வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக ஒவ்வொரு வங்கியின் கிளைகளுக்கும் அடையாள எண்ணான எஃப் எஸ் சி கோட் எண் கொடுக்கப்படுகிறது. முக்கியமாக இணைய தள பரிவர்த்தனைகள் இதன் மூலமே நடைபெறுகின்றன. நாட்டின் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் இணை வங்கிகள் கடந்த வருடம் இணைக்கப்பட்டன. அத்துடன் பாரத பெண்கள் வங்கியும் இணைக்கப்பட்டதால் நாட்டின் மிகப் பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.
 
அதை ஒட்டி தற்போது 1295 கிளைகளின் அடையாள எண்ணை பாரத ஸ்டேட் வங்கி மாற்றி உள்ளது. இந்த மாறுதல் குறித்த அறிவிப்பு வங்கியின் இணய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அந்த இணைய தளத்தினுள் சென்று தங்கள் வங்கியின் கிளையின் பெயரை பதிந்தால் புதிய எண்கள் தெரியவரும் என வங்கி அறிவித்துள்ளது.

No comments: