உட்காரலாமே... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, July 30, 2018

உட்காரலாமே...


நாமெல்லாம் எப்பவுமே காலை தொங்க வச்சுத்தாங்க அதிகமா உட்கார்கிறோம்… 2 சக்கர வாகனத்தில போகும்போது, பேந்தில

போகும்போது, தொடர்வண்டியில போகுறப்போ, படம் பார்க்கிற தியேட்டர்லயும், பள்ளிக்கூடங்கள்லயும், வேலை பாக்குற இடங்கள்லயும், ஏன் நம்ம வீட்டுலயும், கட்டில்ல, நாற்காலில இப்படி நல்லா யோசிச்சுப் பாத்தா நாம ரொம்பநேரம்  நம்ம காலைத் தொங்க வச்சுக்கிட்டே தான் இருக்கிறோம்.

இப்படி காலைத் தொங்கவச்சுக்கிட்டு உட்காருவதால் நமக்குப் பல உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டகுதுஇதுக்குக் காரணம், நம்ம காலைத் தொங்கவச்சு உக்காரும்போது, நம்ம உடம்புல ஓடுற இரத்த ஓட்டம் இடுப்புக்குக் கீழ மட்டுமே அதிகமாக போகுது

நாம காலை மடக்கி சம்மணங்கால் போட்டுக்கிட்டு உக்காரும்போது நம்ம இடுப்புக்கு மேல ரத்தஒட்டம் அதிகமா வர்றதுக்கு வாய்ப்புள்ளது. நம்ம உடம்புல இடுப்புக்குக் கீழ இருக்குற நம்மளோட கால்களுக்கு, நடக்குறப்போ மட்டும் இரத்த ஓட்டம் போனால் போதும்.
 
மிக முக்கிய உறுப்புகளான நுரையீரல், மூளை, கண், காது, சிறுநீரகம், கணையம் ஆகியவை அனைத்தும் இடுப்புக்கு மேல் பகுதியில தாங்க இருக்குது.

ஒருத்தர் காலைத் தொங்க விடாம சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தால் அவருக்கு முழுசக்தியும், உடல்ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்குமாம்.

எனவே, சாப்பிடும்போதாவது கீழ உக்காந்து காலை நல்லா மடக்கி உக்காந்துதான் சாப்பிடணும். ஏன்னா, இடுப்புக்கு கீழ ரத்தஓட்டம் போகாம முழுசக்தியும் நம்ம வயித்துக்குப் போகும்போது நமக்கு சீரணம் நல்லா நடக்குது. சாப்பிடும்போது காலைத் தொங்க வச்சு நாற்காலில உக்காந்து சாப்பிடும்போது இரத்தஓட்டம் வயித்துக்குப் போகாம காலுக்கே அதிகமாக போய்டுதுது.

அப்புறம் இந்திய வகை கழிப்பறை பயன்படுத்தும்போது மட்டும்தான் நாம் நம்ம காலை மடக்கி உக்கார்றோம்.  வெஸ்டர்ன் கழிப்பறையில உக்காரும்போது நம்ம குடலுக்கு அதிகமான அளவு அழுத்தம் கொடுக்கப்படறது இல்ல.

ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கனும். உங்களால சம்மணம் போட்டுக்கூட அமர முடியலனா இந்த உடம்ப எந்த அளவுக்குக் கெடுத்து வச்சுருக்கோம்னு புரிஞ்சுக்கோங்க.

முடிஞ்சவர காலை தொங்கவச்சு உக்காருவதை தவிர்த்துவிடுங்கள்எங்க உக்காந்தாலும் சம்மணம் போட்டே உக்காருங்கசாப்பிடும்போது தரையில ஏதாவது ஒரு விரிப்பு மேல உக்காந்து சம்மணம் போட்டு உக்காந்து சாப்பிட்டா தான் சாப்பாடு நல்லா சீரணமாகும்வாய்ப்பே இல்லன்னாலும், டைனிங் டேபிள்ல உக்காந்து காலை மடக்கி சாப்பிட்டுக்கலாம்..
சாப்பிடுற முறைய கொஞ்சம் கவனிங்க…!
 
1. நின்னுகிட்டு சாப்பிடுற பழக்கத்த மாத்தி, குடும்பத்தோட உக்காந்து சாப்பிடுங்க

2. எந்த சாப்பாடா இருந்தாலும் நல்லா மென்னு, எச்சில் கலந்து, கூழா ஆக்கி சாப்பிடுங்க

3. பேசிக்கிட்டோ, TV யோ, புத்தகம் படிச்சுக்கிட்டோ எப்பவும் சாப்பிடாதீங்க
 
4. சாப்பிடும்போது நடுவுலயோ, அரை மணி நேரத்டுக்குள்ளயோ,  தேவையில்லாம தண்ணீர் குடிக்காதீர்கள். சாப்பிட்டு அரை மணிநேரம் கழிச்சு தண்ணீர் தவிக்கும்போது குடிங்க. எப்போ தாகம் எடுக்குதோ அப்ப மட்டும் தண்ணீர் குடிங்க

5. அவசர அவசரமா எப்பவும் சாப்பிடாதீங்க

6. புடிக்காத சாப்பாட்ட கஷ்டப்பட்டு சாப்பிடாதீங்க

7. புடிச்சத அளவுக்கு மேல சாப்பிடாதீங்க

8. பழம், உலர் பழங்கள், கொட்டைகள் சாப்பிட பழகுங்க

9. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் முன்கூட்டியே பழங்கள் சாப்பிடுறதுனா சாப்பிட்டுக்கோங்கஅப்புறம் பழங்கள் சாப்பிட வேணாம்
 
10. பழம் சாப்பிடும்போது ஒரு வகை பழங்களை மட்டும் சாப்பிடுங்க. மாதுளை சாப்பிட்டா மாதுளை மட்டும் சாப்பிடுங்க. அதோட சேர்த்து வாழைப்பழம் மாதிரி வேறு வகை பழங்களை சாப்பிட வேணாம்.

11. சாப்பிட்ட உடனே தூங்க வேணாம்

12. சாப்பிட வேண்டிய நேரம்
காலை – 7 to 8 க்குள்
மதியம் – 12 to 2 க்குள்
இரவு – 7 to 9 குள்
 
14. சாப்பிடுறதுக்கு முன்பும், பின்பும் உங்களுக்குப் பிடித்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்க

#expectkids

No comments: